தேசியம்
செய்திகள்

அமெரிக்காவின் வரிவிதிப்பை தவிர்க்க கனடாவுக்கு உத்தரவாதம் எதுவும் கிடைக்கவில்லை?

Donald Trump எச்சரித்து வரும் வரிவிதிப்பை தவிர்க்க கனடாவுக்கு உத்தரவாதம் எதுவும் கிடைக்கவில்லை என  அமெரிக்காவுக்கான கனடிய தூதர் தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட Donald Trump கனடாவிலிருந்து அனைத்து இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரியை விதிக்க எச்சரித்து வருகின்றார்.
இந்த வரிகளை தவிர்க்க கனடாவுக்கு உத்தரவாதம் எதுவும் கிடைக்கவில்லை என அமெரிக்காவுக்கான கனடியத் தூதர் Kirsten Hillman தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து விவாதிக்கப்பட்ட கனடிய பிரதமர் Justin Trudeau,மாகாண முதல்வர்களுக்கு இடையிலான சந்திப்பில் Kirsten Hillmanனும் பங்கேற்றார்.
அமெரிக்கா கனடிய இறக்குமதிகளுக்கு வரி விதிக்க முடிவு செய்தால் ஒன்றுபட்ட, உறுதியான முறையில் பதிலளிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா எச்சரிக்கும் வரி உண்மையில் அவர்களின் பொருளாதாரத்தை பாதிக்கும் என Kirsten Hillman நினைவுபடுத்தினார்.

Related posts

பதவி விலகினார் Alberta முதல்வர் Jason Kenney

Lankathas Pathmanathan

Quebec இடைத் தேர்தலில் Bloc Québécois வெற்றி!

Lankathas Pathmanathan

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விவகாரத்தில் கனடிய அரசின் தலையீட்டை வலியுறுத்தும் CTC

Lankathas Pathmanathan

Leave a Comment