அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட Donald Trumpபை கையாள்வதில் எந்த எதிர் நடவடிக்கைகளையும் கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly நிராகரிக்கவில்லை.
கனடிய இறக்குமதிகள் மீது வரி விதிக்கப்படும் என Donald Trump அச்சுறுத்தியுள்ளளார்.
அந்த வரி விதிப்பு அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்காவிற்கான எரிசக்தி ஏற்றுமதிகளை தடுப்பதை அமைச்சர் Melanie Joly நிராகரிக்கவில்லை.
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட Donald Trump கனடாவிலிருந்து அனைத்து இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரியை விதிக்க அறிவித்துள்ள நிலையில் இந்த கருத்து வெளியானது.
கனடிய பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதித்தால் அது இரு நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என கனடிய பிரதமர் JustinTrudeau அண்மையில் தெரிவித்திருந்தார்.
அதேவேளை கனடாவில் வரி விதிக்கப்படக்கூடிய அமெரிக்க தயாரிப்புகளின் பட்டியலை கனடிய அதிகாரிகள் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது இங்கு குறிப்பிடத்தக்கது.