Liberal கட்சியின் அடுத்த தலைவர் ஆங்கிலம், பிரெஞ்சு என இரு மொழிகளும் பேசுபவராக இருப்பது அவசியம் என கட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.
Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய பிரதமருக்கான தேடல் ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் புதிய தலைவர் இரு மொழி பேசுபவராக இருக்க வேண்டும் என ஆங்கிலம், பிரெஞ்சு பேசும் தற்போதைய, முன்னாள் Liberal கட்சி அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
பொதுத் தேர்தல் எந்நேரமும் நடைபெறக்கூடிய சாத்தியக்கூறுகள் மத்தியில், புதிய கட்சித் தலைவர் ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் புலமை கொண்ட Conservative தலைவர் Pierre Poilievre, NDP தலைவர் Jagmeet Singh ஆகியோரை எதிர்கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டியது அவசியம் என கட்சி அதிகாரிகள் கூறினர்.
Liberal கட்சியின் அடுத்த தலைவரும், கனடாவின் அடுத்த பிரதமரும் March 9 தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.