Justin Trudeau பதவி விலக வேண்டும் என Liberal கட்சியின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்புகின்றனர்.
Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Anthony Housefather இந்த கருத்தை தெரிவித்தார்.
பிரதமரின் தலைமை குறித்து பல மாத காலம் கேள்விகள் எழுந்த நிலை உள்ளது.
துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland அமைச்சரவையில் இருந்து விலகிய நிலையில் பிரதமரின் தலைமை மேலும் உறுதியற்றதாகி உள்ளது.
Justin Trudeau பதவி விலகி, முன்கூட்டிய தேர்தலுக்கு முன்னதாக ஒரு புதிய தலைவருக்கு வழிவிடுமாறு அதிகரித்த எண்ணிக்கையிலான Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளனர்.
பிரதமர் Justin Trudeau பதவி விலக வேண்டும் என கோரும் Liberal நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் Anthony Housefather.
பிரதமர் பதவி விலக வேண்டும் என தான் எண்ணுவது போல் தான் உரையாடிய Liberal நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் உணர்கிறார்கள் என் அவர் கூறினார்.
அதேவேளை பெரும்பாலான Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் Justin Trudeau வெளியேற வேண்டும் என விரும்புகின்றனர் என Ontario நாடாளுமன்ற உறுப்பினர் Chandra Arya தெரிவித்தார்.
“தலைமைத்துவத்தை மாற்றுவதை தவிர வேறு வழியில்லை” என் Nepean தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.