Markham நகரில் வாகனத்தால் மோதப்பட்ட தமிழர் ஒருவர் மரணமடைந்தார்.
இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை (19) காலை நிகழ்ந்தது.
இதில் பலியானவர் செந்தூரன் என நண்பர்களினால் அடையாளம் காணப்பட்டார்.
Markham – Denison சந்திப்புக்கு அருகில் பாதசாரியான இவர் வாகனத்தால் மோதப்பட்டதாக தெரியவருகிறது.
இவரை வாகனத்தால் மோதியவர் சம்பவ இடத்தில் நின்று காவல்துறையின விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்.
இந்த சம்பவம் குறித்த காவல்துறையினரின் விசாரணை தொடரும் நிலையில் இதுவரை குற்றச்சாட்டுக்கள் எதுவும் பதிவாகவில்லை.