December 21, 2024
தேசியம்
செய்திகள்

கனடியத் தமிழர் கூட்டு – சிவஞானம் சிறீதரன் பிரத்தியேக சந்திப்பு!

கனடாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கனடியத் தமிழர் கூட்டின் பிரதிநிதிகளை வெள்ளிக்கிழமை (20) சந்தித்தார்.

இலங்கையின் பொறுப்புக்கூறலை அர்த்தமுள்ளதாக்குமாறு கனடிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தியதாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கனடியத் தமிழர் கூட்டின் (Canadian Tamil Collective) பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

Torontoவில் சுமார் இரண்டு மணி நேரம் பிரத்தியேகமான முறையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் ஈழத்தமிழர் விவகாரங்கள் சார்ந்து இரு தரப்புக்கும் இடையில் ஆக்கபூர்வமான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

கனடாவுக்கான தனது பயணத்தின் காரணம் குறித்து இந்த சந்திப்பில் சிவஞானம் சிறீதரன் கூட்டின் பிரதிநிதிகளிடம் விளக்கமளித்தார்.

கனடாவின் வெளிவிவகார அமைச்சின் Indo-Pacific பிராந்தியங்களுக்கான பிரதியமைச்சர் Weldon Epp , அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கரி ஆனந்தசங்கரி உள்ளிட்ட கனடிய அரசியல் தரப்பினருடன் நடைபெற்ற தனது உரையாடல் குறித்த விபரங்களையும் சிவஞானம் சிறீதரன் கூட்டின் பிரதிநிதிகளிடம் விளக்கினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆதரவாளர்களின் கோரிக்கைக்கு அமைவாக இரு தரப்பினருக்கும் இடையிலான இந்த சந்திப்பை ஊடகவியலாளர் உதயன் S. பிள்ளை ஏற்பாடு செய்திருந்தார் என கூட்டின் பிரதிநிதிகள் தேசியத்திடம் தெரிவித்தனர் .

Related posts

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 27ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை (English version below)

thesiyam

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

காட்டுத்தீ நிலைமை தீவிரமானது: பிரதமர் Justin Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment