Toronto காவல்துறை அதிகாரி ஒருவர் கடமை நேரத்தில் உயிரிழந்த சம்பவம் வியாழக்கிழமை (19) நிகழ்ந்தது.
பலியான காவல்துறை அதிகாரி 14 வருடங்கள் காவல்துறையில் பணியாற்றிய Det. John Park என அடையாளம் காணப்பட்டார்.
தேடுதல் நடவடிக்கை ஒன்றை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுதில் அவர் மரணமடைந்ததாக தெரியவருகிறது.
இவர் இரண்டு குழந்தைகளின் தந்தையாவார்.
Toronto காவல்துறையின் 31ஆவது பிரிவு வாகன தரிப்பிடத்தில் அவர் வியாழன் அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
கொள்ளை சம்பவ விசாரணையின் ஒரு பகுதியாக அதிகாலை நேரத்தில் தேடுதல் நடவடிக்கைக்கு அவர் வியாழன் அதிகாலை அதிகாரிகளுக்கு உதவியதாக தெரியவருகிறது.
அவரது மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடர்கிறது.
Ontario முதல்வர் Doug Ford Toronto நகர முதல்வர் Olivia Chow உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.