Conservative கட்சியின் மூன்றாவது நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் Liberal அரசு வெற்றி பெற்றது.
நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் சிறுபான்மை Liberal அரசாங்கத்தை கவிழ்க்க Conservative தலைவர் Pierre Poilievre மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.
திங்கட்கிழமை (09) வாக்கெடுப்புக்கு வந்த இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக NDP வாக்களித்தது.
Liberal அரசாங்கம் குறித்து NDP தலைவர் Jagmeet Singh முன்வைத்த விமர்சித்ததை Conservative கட்சியின் இந்த தீர்மானம் மேற்கோள் காட்டியது.
இந்த விடயத்தில் NDP தலைவருடன் உடன்படுமாறும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வாக்களிக்குமாறும் Conservative கட்சி கோரியது.
ஆனாலும் அரசாங்கத்தை கவிழ்ப்பதில் Pierre Poilievre ரூக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என NDP தலைவர் கடந்த வாரம் கூறியிருந்தார்.