இந்த நிதியாண்டின் முதல் பாதியில் மத்திய அரசாங்கம் 13 பில்லியன் டொலர் பற்றாக்குறையை பதிவு செய்துள்ளது.
April, September மாதங்களுக்கு இடையில் மத்திய அரசின் பற்றாக்குறை 13 பில்லியன் டொலர் என மத்திய நிதித்துறை கூறுகிறது.
கடந்த ஆண்டு இதே காலத்தில் 8.2 பில்லியன் டொலர் பற்றாக்குறை பதிவானது.
இந்த காலகட்டத்தில் வருவாய் 20.3 பில்லியன் டொலர் அல்லது 9.6 சதவீதம் உயர்ந்தது என வெள்ளிக்கிழமை (29) வெளியிடப்பட்ட மாதாந்த நிதி கண்காணிப்பு அறிக்கை கூறுகிறது.