தேசியம்
செய்திகள்

Justin Trudeauவின் தலைமை குறித்து இரகசிய வாக்கெடுப்பு

Justin Trudeauவின் தலைமை குறித்து இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்  விரும்பம் தெரிவித்தனர்.
பிரதமர் Justin Trudeau கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா என்பதை தீர்மானிக்க இரகசிய வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்து வரும் Liberal நாடாளுமன்ற குழு  உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
இதில் முன்னாள் அமைச்சரும் நீண்ட கால Liberal நாடாளுமன்ற உறுப்பினருமான Helena Jaczek இணைந்துள்ளார்.
கட்சித் தலைவர் பதவியில் இருந்து Justin Trudeau விலக வேண்டும் என பல வாரங்களாக அழுத்தம் அதிகரித்து வருகிறது.
பிரதமர் தனது அரசியல் எதிர்காலம் குறித்து இந்த வாரம் திங்கட்கிழமைக்குள் (28) பதில் வழங்க வேண்டும் என, கடந்த புதன்கிழமை (23) நடைபெற்ற கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில்  சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியிருந்தனர்.
இந்த விடயத்தில் பிரதமரின் பதில் நடவடிக்கை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்  ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர்.
அடுத்த தேர்தலில் Conservative தலைவர் Pierre Poilievre தோற்கடிக்கப்பட  வேண்டும் என்பதில் Liberal நாடாளுமன்ற குழு ஒன்றுபட்டுள்ள நிலை உள்ளதாக Helena Jaczek கூறினார்.
ஆனாலும் இந்தத் தேர்தலில் Liberal கட்சியை யார் வழிநடத்த வேண்டும் என்ற கேள்விக்கு தெளிவாக பதில் நாடாளுமன்ற குழு உறுப்பினர்களிடையே இல்லை என அவர் தெரிவித்தார்.
எந்த விதமான விளைவுகள் குறித்து கவலைப்படாமல் வாக்களிக்க இரகசிய வாக்கெடுப்பே சிறந்த வழியாகும் என மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் Yvan Baker கூறினார்.
Justin Trudeauவை தலைமையில் இருந்து வெளியேற்ற Liberal நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முறையான வழிமுறை எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சியின் தலைவராக நீடிக்க விரும்புவதாகவும் தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மத்தியில் பிரதமர் Justin Trudeau கடந்த வாரம் வலியுறுத்தி இருந்தார்.
நாடாளுமன்ற குழுவில் கருத்து வேறுபாடு இருந்தாலும் கட்சியின் ஐக்கியத்தில் எந்தவித கேள்வியும் இல்லை எனவும் பிரதமர் கடந்த வாரம் நடைபெற்ற  Liberal கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

Related posts

மாத இறுதியில் Ontarioவில் வரவு செலவுத் திட்டம்

Lankathas Pathmanathan

Bell ஊடக வலைய பணி நீக்கங்கள் குறித்து பிரதமர் அதிருப்தி

Lankathas Pathmanathan

மீண்டும் நான்காயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள்!

Gaya Raja

Leave a Comment