Liberal கட்சியின் நாடாளுமன்ற குழுவின் பெரும்பான்மையானவர்கள் பிரதமரை ஆதரிப்பதாக துணை பிரதமர் தெரிவித்தார்.
பெரும்பான்மையான Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து பிரதமர் Justin Trudeauவை தலைவராக ஆதரிப்பதாக துணைப் பிரதமர் Chrystia Freeland கூறினார்.
அடுத்த வாரம் நடைபெற உள்ள Liberal கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் பிரதமரை பதவி விலகிக் கொள்ளுமாறு Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோர திட்டமிட்டுள்ளனர் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்தக் கருத்தை Chrystia Freeland வெளியிட்டார்.
அதேவேளை வெளியுறவு அமைச்சர் Mélanie Joly தனது ஆதரவை பிரதமருக்கு வெளியிட்டார்.