Samidoun கனடாவில் பயங்கரவாத குழுவாக தடைசெய்யப்பட்டுள்ளது.
பாலஸ்தீன ஆதரவு குழுவான Samidounனை பயங்கரவாதக் குழுவாக கனடா தடைசெய்துள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் Dominic LeBlanc இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
இதன் மூலம் இந்த குழுவிற்கு மக்கள் நன்கொடை அல்லது சொத்து வழங்குவதை தடை செய்யப்படுகிறது.
பாலஸ்தீனிய கைதிகளின் ஒற்றுமை வலைப்பின்னல் எனவும் Samidoun அழைக்கப்படுகிறது.
கனடா ஏற்கனவே பயங்கரவாத அமைப்பாக தடைசெய்துள்ள மற்றொரு குழுவான Popular Front for the Liberation of Palestine என்ற அமைப்புடன் Samidoun நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ளது என கூறப்படுகிறது.
Samidounனை பயங்கரவாத அமைப்பாக தடை செய்ய Conservative கட்சி கடந்த வாரம் அழைப்பு விடுத்தது.
அதேவேளையில் இந்த அமைப்போடு இணைந்த கனடிய குடிமகனை அமெரிக்கா தனது பயங்கரவாத எதிர்ப்பு பட்டியலில் இணைத்துள்ளது.
கனடிய குடிமகன் Khaled Barakat அமெரிக்க கருவூல திணைக்களத்தால் பட்டியலிட்டுள்ளார்.