தேசியம்
செய்திகள்

ரஷ்ய எல்லைக்குள் உக்ரைன் NATO ஆயுதங்களை பயன்படுத்தலாம்: Justin Trudeau

ரஷ்ய எல்லைக்குள் உக்ரைன் தாக்குதல் நடத்த அனுமதிக்க வேண்டும் என கனடிய பிரதமர் தெரிவித்தார்.

NATOவின்  நீண்ட தூர ஆயுதங்களை பயன்படுத்தி ரஷ்யாவை தாக்குவதை கனடா முழுமையாக ஆதரிக்கிறது என பிரதமர்  வெள்ளிக்கிழமை (13) தெரிவித்தார்.

மருத்துவமனைகள், குழந்தை பராமரிப்பு மையங்கள் மீது ரஷ்யா மேற்கொள்ளும் தாக்குதல்களை தடுக்க NATO வழங்கிய ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்திக்கொள்ள முடியும் எனவும் Justin Trudeau கூறினார்.

உக்ரேனிய குடிமக்களின் உள்கட்டமைப்பை சீரழிக்கும் ரஷ்யாவின் தொடர்ச்சியான தாக்குதலை தடுக்கவும் இது அவசியமானது என அவர் கூறினார்.

ஆனால் NATOவின்  நீண்ட தூர ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்துவது கனடாவையும் அதன் நட்பு நாடுகளையும் தம்முடன் நேரடிப் போருக்கு இழுக்கும் என ரஷ்யா அச்சுறுத்துகிறது.

இந்த நிலையில் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது அல்லது தொடர்வது ரஷ்ய ஜனாதிபதி Vladimir Putinனின் முடிவு என பிரதமர் Justin Trudeau கூறினார்.

ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக போராடுவதில் உக்ரைன் வெற்றி பெற வேண்டும் என்பதில் கனடா உறுதியாக உள்ளது  எனவும்  Justin Trudeau கூறினார்.

Related posts

கறுப்பு ஜூலையின் 40வது நினைவு தினத்தை கனேடிய தமிழர்கள் நினைவேந்தல்

Lankathas Pathmanathan

AstraZeneca தடுப்பூசியுடன் தொடர்புடைய மேலும் இரண்டு மரணங்கள்!

Gaya Raja

வெளிநாட்டு தலையீடுகள் குறித்து பிரதமருக்கு 2021 முதல் ஐந்து முறை விளக்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment