தேசியம்
செய்திகள்

மனித கடத்தல் விசாரணையில் இருவர் மீது குற்றச்சாட்டு

மனித கடத்தல் விசாரணையில் இருவர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்

பத்து மாதங்கள் தொடர்ந்த மனித கடத்தல் விசாரணையில் 36 குற்றச்சாட்டுகளை இவர்கள் எதிர்கொள்கின்றனர்

கிழக்கு Ontarioவில் ஆரம்பித்த இந்த விசாரணையில் Kingston, Ottawa, Peel, Toronto, Windsor, York காவல்துறையினர் ஈடுபட்டனர்.

இந்த விசாரணை தெற்கு Ontario, Quebec, Nova Scotia வரை நீண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Project Nebula எனப் பெயரிடப்பட்ட இந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் அடையாளம் காணப்பட்டனர் .

இந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் Brampton நகரை சேர்ந்த 45 வயதானவர், Novo Scotia மாகாணத்தின் Sydney நகரை சேர்ந்த 33 வயதானவர் என கூறப்படுகிறது.

இவர்கள் குறித்த மேலதிக விபரங்கள் வெளியாகவில்லை.

கைதானவர்களுக்கு எதிரான குற்றச் சாட்டுகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

AstraZeneca தடுப்பூசி; இரத்த உறைவால் Quebec இல் பெண் ஒருவர் மரணம்!!

Gaya Raja

Ontarioவில் அவசரகால நிலை அறிவிப்பு

Lankathas Pathmanathan

சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடியர்களை நாடு திரும்ப உதவுமாறு மத்திய அரசாங்கத்திற்கு நீதிபதி உத்தரவு

Lankathas Pathmanathan

Leave a Comment