December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனடிய எல்லையில் புகலிட விதிகளை கடுமையாக்கும் அமெரிக்கா

கனடிய எல்லையில் புகலிட விதிகளை கடுமையாக்க அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு திணைக்களம் இது குறித்த அறிவித்தலை வெளியிட்டது.

கனடிய எல்லை ஊடாக புகலிடம் கோருபவர்கள் வழக்கறிஞர் ஆலோசனை பெற்றுக் கொள்ள எதிர்காலத்தில் அனுமதி வழங்கப்படமாட்டாது என அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி Joe Biden கடந்த June மாதம் அறிவித்த எல்லைப் பாதுகாப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைகிறது.

அமெரிக்க ஜனாதிபதியின் அறிவித்தல், Mexico உடனான அமெரிக்க எல்லை குறித்து கவனம் செலுத்தி இருந்தால் அதன் தாக்கம் கனடிய எல்லையிலும் எதிரொலிக்கிறது.

கனடிய எல்லை ஊடக அமெரிக்காவிற்குள் பிரவேசிக்கும் புகலிட கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை, Mexico எல்லை ஊடக அமெரிக்காவிற்குள் பிரவேசிக்கும் புகலிட கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையை விட குறைவானதாகும்.

ஆனால் அண்மைக் காலத்தில் கனடிய எல்லை ஊடக அமெரிக்காவிற்குள் பிரவேசிக்கும் புகலிட கோரிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கனடாவுடனான எல்லையில் 12,612 பேரை கைது செய்துள்ளதாக அமெரிக்க சுங்கம், எல்லைப் பாதுகாப்பு தரவுகள் சுட்டிக் காட்டுகிறது.

இது 2023ஆம் ஆண்டு முழுவதும் பதிவான 12,218 கைதுகளில் இருந்து பெரும் அதிகரிப்பாகும்.

இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கனடிய எல்லையில் கடுமையான பாதுகாப்பு, சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க அமெரிக்க  உள்நாட்டுப் பாதுகாப்பு திணைக்களம் முடிவு செய்துள்ளது.

Related posts

Toronto பாடசாலைகளில் மீண்டும் முககவசம்?

Lankathas Pathmanathan

வெளிவிவகார அமைச்சருக்கு COVID உறுதி

Lankathas Pathmanathan

இரண்டாவது தடுப்பூசிக்கான தகுதியை விரிவுபடுத்தும் Ontario

Gaya Raja

Leave a Comment