தேசியம்
செய்திகள்

இஸ்ரேலுக்கான பயண எச்சரிக்கையை அதிகரித்தது கனடா

இஸ்ரேலுக்கான பயண எச்சரிக்கையை கனடா மீண்டும் அறிவித்துள்ளது.

இந்தப் பயண எச்சரிக்கையை கனடா அதிக ஆபத்து நிலைக்கு அதிகரித்துள்ளது.

இதில் இஸ்ரேலுக்கான அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு கனடிய வெளிவிவகார அமைச்சு சனிக்கிழமை (03) கனடியர்களுக்கு எச்சரித்துள்ளது.

தற்போதைய பிராந்திய மோதல்கள் காரணமாக தோன்றியுள்ள கணிக்க முடியாத பாதுகாப்பு நிலைமை இந்த எச்சரிக்கைக்கு காரணமாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் ஏற்பட்டுள்ள ஆயுத மோதல்கள் அதிகரிப்பது மக்களின் பாதுகாப்பை பாதிக்கும் என அந்த எச்சரிக்கை கூறுகிறது.

இஸ்ரேலில் உள்ள கனடியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தி உள்ள கனடிய அரசாங்கம், அங்கிருந்து வெளியேறுவதற்கு உதவ கனடிய அரசாங்கத்தை நம்பி இருக்கக் கூடாது எனவும் கூறியுள்ளது.

Related posts

Quebecகில் COVID கட்டுப்பாடுகள் சில தளர்வு

Lankathas Pathmanathan

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: எதிர்க்கட்சிகள் கோரிக்கை

Lankathas Pathmanathan

Halifaxசில் காட்டுத்தீ 50 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டது

Lankathas Pathmanathan

Leave a Comment