தேசியம்
செய்திகள்

பிரதமர், துணை பிரதமர் உள்ளிட்டவர்களுக்கு கொலை மிரட்டல்?

உயர்மட்ட அரசாங்கத் தலைவர்கள் சிலரைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தியதாக இரண்டு Alberta மாகாண ஆண்கள் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

பிரதமர் Justin Trudeau, துணை பிரதமர் Chrystia Freeland, புதிய ஜனநாயக கட்சி தலைவர் Jagmeet Singh ஆகியோரை கொலை செய்ய அச்சுறுத்திய இருவர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

May 10ஆம் திகதி பிரதமர் Justin Trudeauவைக் கொல்லும் அச்சுறுத்தல் குறித்து காவல்துறையினருக்கு எச்சரிக்கப்பட்டது.

இதில் Calgary நகரை சேர்ந்த 23 வயதான Mason John Baker, குற்றவியல் சட்ட பிரிவில் மிரட்டல் குற்றம் சாட்டுகளை எதிர்கொள்கிறார்

மற்றொரு விசாரணையில் பிரதமர் Justin Trudeau,  துணை பிரதமர் Chrystia Freeland, புதிய ஜனநாயக கட்சி தலைவர் Jagmeet Singh ஆகியோரை கொல்லப் போவதாக மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து காவல்துறையினர் June 7ஆம் திகதி தகவல் பெற்றனர்.

இதில் Edmonton நகரை சேர்ந்த 67 வயதான Garry Belzevick குற்றவியல் சட்ட பிரிவில் மிரட்டல் குற்றம் சாட்டுகளை எதிர்கொள்கிறார்

கைதான இருவரும் இந்த வாரம் தமது குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நீதிமன்றத்தில் ஆஜராவார்கள்.

இவர்களுக்கு எதிரான குற்றச் சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

Mississauga-Lakeshore தொகுதியில் மத்திய இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan

முழுமையாக தடுப்பூசி போட்ட அமெரிக்கர்களை August நடுப்பகுதியில் கனடாவுக்கு அனுமதிக்கலாம்: பிரதமர் Trudeau

Gaya Raja

Oshawa உணவகத்தின் முன்னாள் மேலாளரான தமிழர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு

Lankathas Pathmanathan

Leave a Comment