தேசியம்
செய்திகள்

N.B. வாகன விபத்தில் மூன்று இராணுவத்தினர் மரணம்!

New Brunswick வாகன விபத்தில் மூன்று கனடிய இராணுவத்தினர் மரணமடைந்தனர்.

கடந்த வார விடுமுறையில் நிகழ்ந்த விபத்தில் மூவர் மரணமடைந்தனர்.

விபத்தின் போது இவர்கள் மூவரும் சேவையில் இல்லை என RCMP கூறியது.

ஞாயிற்றுக்கிழமை (14) அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக Oromocto RCMP கூறியது.

இந்த வாகனத்தில் இருந்த மூவரும், 31 கனடிய படைப்பிரிவு குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதை தேசிய பாதுகாப்புத் திணைக்களத்தின் மூத்த அதிகாரி உறுதிப்படுத்தினார்.

இவர்கள் பயணித்த வாகனம், சாலையை விட்டு விலகி, மரத்தில் மோதி தீப்பிடித்ததில் விபத்து ஏற்பட்டதாக RCMP நம்புகிறது.

Related posts

பொதுப் போக்குவரத்தில் அதிகரித்து வரும் வன்முறை

Lankathas Pathmanathan

முன்னாள் இராணுவ அதிகாரி அரசாங்கத்திற்கு எதிராக இழப்பீடு வழக்கு

Lankathas Pathmanathan

கனடிய நாடாளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் உரை

Lankathas Pathmanathan

Leave a Comment