தேசியம்
செய்திகள்

கனடிய மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவரை பதவி நீக்குவோம்: Conservative

கனடிய மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு தலைமை தாங்குவதற்கு நியமிக்கப்பட்டவரை Pierre Poilievre  தலைமையிலான அரசாங்கம் அகற்றும் என Conservative கட்சி தெரிவித்தது.

Liberal அரசாங்கத்தால் இந்த பதவிக்கு Birju Dattani நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் அடுத்த மாதம் கனடிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை ஆணையராக பதவியேற்க உள்ளார்.

ஐந்தாண்டு காலத்திற்கு இந்தப் பதவி காலம் நீடிக்கவுள்ளது.

இந்த நியமனத்தை Conservative கட்சி இரத்து செய்யும் என கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவரான Melissa Lantsman ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை நியாயப்படுத்துவது உட்பட இஸ்ரேல் விரோத நிலைப்பாடுகளை Birju Dattani கொண்டுள்ளதாக Melissa Lantsman கூறினார்.

இந்த நிலையில் பிரதமர் Justin Trudeau அவரை பதவி விலகக் கோர வேண்டும் அல்லது அவரை பதவி நீக்க வேண்டும் என Melissa Lantsman வலியுறுத்தினார்.

Related posts

குளிர் காலத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது: சுகாதார அமைச்சர் Christine Elliott 

Gaya Raja

சட்ட நடவடிக்கை முன்னெடுக்கும் Han Dong

Lankathas Pathmanathan

COVID மரணங்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை அண்மிக்கிறது

Lankathas Pathmanathan

Leave a Comment