தேசியம்
செய்திகள்

Stanley Cup: இறுதி சுற்றுக்கு தெரிவான Edmonton Oilers

NHL Playoff தொடரின் இறுதி சுற்றுக்கு Edmonton Oilers அணி தெரிவானது.

Dallars Stars அணியை Edmonton Oilers அணி ஞாயிற்றுக்கிழமை (02) இரவு வெற்றி  பெற்றது.

ஏழு ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரில் நான்கு ஆட்டங்களில் வெற்றி பெற்ற Oilers அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

NHL Playoff தொடர் நான்கு கனடிய அணிகளுடன் ஆரம்பமானது.

இவற்றில் Toronto Maple Leafs, Vancouver Canucks, Winnipeg Jets ஆகிய கனடிய அணிகள் இம்முறை இந்த தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டன.

இந்த நிலையில் Oilers அணி மாத்திரம் இந்த தொடரில் தொடர்ந்து போட்டியிடுகிறது.

NHL Playoff தொடரின் இறுதி சுற்றில் Florida Panthers அணியை Oilers அணி எதிர்கொள்கிறது.

இந்தத் தொடரில் வெற்றிபெறுவதன் மூலம் 30 ஆண்டுகளில் Stanley Cup வென்ற முதலாவது கனடிய அணியாக Oilers அணி மாறும்.

இறுதியாக 1993 இல் Montreal Canadiens அணி Stanley கோப்பையை வென்றது.

Related posts

அத்தியாவசிய மருந்துகளின் பெருமளவிலான ஏற்றுமதியை தடுக்க நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் 1,725 தொற்றுக்கள்!

Gaya Raja

Albertaவில் அமைச்சரவை மாற்றம் – பதவி இழந்தார் சுகாதார அமைச்சர்!

Gaya Raja

Leave a Comment