தேசியம்
செய்திகள்

RCMP அதிகாரிகளால் சுடப்பட்ட 27 வயது இளைஞன் மரணம்

RCMP அதிகாரிகளால் சுடப்பட்ட 27 வயது இளைஞன் மரணமடைந்தார்.

Manitoba First Nation பகுதியில் இந்த சம்பவம் சனிக்கிழமை (20) மாலை நிகழ்ந்தது.

Manitoba First Nation காவல்துறையினர் விடுத்த அழைப்பை அடுத்து Amaranth RCMP பிரிவு அதிகாரிகள் அங்கு சென்றதாக RCMP தெரிவிக்கிறது.

Sandy Bay First Nation பகுதியில் ஆயுதம் தாங்கிய நபர் குறித்த அழைப்பாக அது அமைந்ததென RCMP தெரிவித்தது.

அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள் சந்தேக நபர் தப்பி ஓடிவிட்டார் என அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் RCMP, Manitoba First Nation காவல்துறையினர் அவரை ஒரு திறந்தவெளி பகுதியில் கண்டுபிடித்தனர்.

பல ஆயுதங்களுடன் இருந்த சந்தேக நபரை RCMP சுட்டுக் காயப்படுத்தியதாக அவர்கள் கூறுகின்றனர்.

சந்தேக நபரின் உயிரை காப்பாற்ற காவல்துறையினர் முயற்சித்த போதிலும் அவர் இறந்து விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

RCMP முக்கிய குற்றச் சேவைகள் பிரிவு இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

Manitoba மாகாண சுயாதீன விசாரணைப் பிரிவினர் தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

மூன்றாவது Conservative வேட்பாளர் தேர்தலில் இருந்து விலக்கல்!

Lankathas Pathmanathan

Hamilton நகரில் தீயில் சிக்கி இரண்டு குழந்தைகள் உட்பட நால்வர் பலி

Lankathas Pathmanathan

விமானப்படையின் உலங்கு வானூர்தி விபத்தில் இருவர் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment