தேசியம்
செய்திகள்

கிழக்கு மாகாண வாகன ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் விலை அதிகரிப்பு!

கனடாவின் கிழக்கு மாகாண வாகன ஓட்டுநர்கள் எரிபொருளின் விலைகளில் மிகப்பெரிய அதிகரிப்பை எதிர்கொள்கின்றனர்.

Ontario, Quebec, Newfoundland and Labrador, New Brunswick, Nova Scotia மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் மிகப்பெரிய எரிபொருள் விலை அதிகரிப்பு கணிக்கப்படுகிறது.

இந்த மாகாணங்களில் எரிபொருளின் விலை லிட்டருக்கு 10 சதங்களுக்கு மேல் அதிகரிக்கலாம் என எதிர்வு கூறப்படுகிறது.

Maritimes மாகாணங்களின் சில பகுதிகளில் ஏற்கனவே எரிபொருள் விலை அதிகரிப்பு அமுலுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் எரிபொருள் விலை அடுத்த ஓரிரு வாரங்களுக்கு தொடர்ந்து அதிகரிக்கலாம் என எதிர்வு கூறப்படுகிறது.

Ontario, Quebec மாகாணங்களில் வியாழக்கிழமை (18) இரவு எரிபொருளின் விலை லிட்டருக்கு 14 சதம் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.

இது Ontario முழுவதும் உள்ள நகரங்களில் எரிபொருளின் விலையை litreக்கு $1.79 வரை உயர்த்தும்.

இது August 2, 2022 க்குப் பின்னர் காணப்படும் அதிகபட்ச விலையாகும்.

Quebec மாகாணத்தில் எரிபொருளின் விலை litreக்கு $1.88 ஆக உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

வாகன உரிம தகடு புதுப்பித்தலை இரத்து செய்யும் Ontario

Lankathas Pathmanathan

கனடாவின் முதல் பெண் நிதி அமைச்சர்; முதலாவது வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளார்!

Gaya Raja

ஒரே நாளில் 27 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுகள்

Lankathas Pathmanathan

Leave a Comment