தேசியம்
செய்திகள்

Ottawaவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்!

பாலஸ்தீன ஆதரவு போராட்டம் ஒன்று திங்கட்கிழமை (15) காலை Ottawa நகரத்தில் நடைபெற்றது.

இந்த போராட்டம் காரணமாக தலைநகர் Ottawaவின் சில பகுதிகளில் போக்குவரத்து தடைபட்டது.

மத்திய கிழக்கில் பதட்டம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

போர் நிறுத்தத்திற்கு கோரிக்கைகளை வலியுறுத்தி பதாதைகளை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் கனடாவின் ஏற்றுமதி கடன் நிறுவனமான Export Development Canada முன் நுழை வாயிலை தடுத்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.

April 15 அன்று கனடாவிலும் உலகெங்கிலும் பல நகரங்களில் நடைபெறும் ஒருங்கிணைந்த ஆர்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த போராட்டம் நிகழ்ந்தது.

இஸ்ரேலுக்கு நிதியளிக்கும் முக்கிய பொருளாதார மையங்களை தடுப்பதை குறிக்கோளாக கொண்டு இந்த
போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஒருங்கிணைக்கப்பட்ட பொருளாதார தடையின் ஒரு பகுதியாக இந்த போராட்டம் நடந்ததாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அனுப்புவதை நிறுத்துமாறு கனடிய அரசாங்கத்திடன் போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த ஆயுதங்கள் காசா பகுதியில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்படுவதற்கு தூண்டுகோலாக இருப்பதாக போராட்டக்காரர்கள் கூறுகிறார்கள்.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் அதன் ஆறாவது மாதத்திற்குள் நுழைந்துள்ள நிலையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Related posts

2022இல் இதுவரை 108,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை கனடா வரவேற்றது

இரண்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி கண்ட சிறுபான்மை அரசு

Gaya Raja

Manitoba எல்லையில் 406 KG போதைப்பொருள் மீட்பு!

Lankathas Pathmanathan

Leave a Comment