தேசியம்
செய்திகள்

கனடிய இராணுவ உறுப்பினர் பனிச்சரிவில் இறந்ததாகக் கருதப்படுகிறது

கனடிய இராணுவ உறுப்பினர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

சுவிட்சர்லாந்தில் விடுமுறையில் சென்ற இராணுவ உறுப்பினர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என கனடிய இராணுவம் தெரிவித்துள்ளது.

April 1 திகதி கனடிய இராணுவ உறுப்பினர் Captain Sean Thomas காணாமல் போனதாக கனடிய ஆயுதப்படையின் அறிக்கை கூறுகிறது.

Captain Sean Thomas 2018 இல் கனடிய ஆயுதப்படையில் இணைந்ததாக இராணுவம் கூறுகிறது.

அவர் கனடிய பயிற்சி உதவிக் குழுவின் ஒரு பகுதியாக கடந்த November மாதம் ஜோர்டானுக்கு அனுப்பப்பட்டார்.

அடுத்த மாதம் அவர் வீடு திரும்புவதாக இருந்தது.

Related posts

தொடர்ந்தும் ஐந்தாவது வருடமாக பொங்கலுக்காக ஒளியூட்டப்படவுள்ள Toronto அடையாள எழுத்துக்கள்

Lankathas Pathmanathan

கனடிய பொருளாதாரம் மீண்டும் சுருங்கியது!

Lankathas Pathmanathan

Conservative தலைமைக்கான விவாத திகதி அறிவிப்பு

Leave a Comment