December 12, 2024
தேசியம்
செய்திகள்

மீண்டும் அதிகரிக்கு இனத்தை மையமாகக் கொண்ட வெறுப்புக் குற்றங்கள்

இனத்தை மையமாகக் கொண்ட வெறுப்புக் குற்றங்களின் எண்ணிக்கை கனடாவில் 2022இல் தொடர்ந்து நான்காவது ஆண்டாக உயர்ந்துள்ளது.

வெறுப்புக் குற்றங்கள் குறித்த கனடிய புள்ளிவிபரத் திணைக்களத்தின் அண்மைய அறிக்கையில் இந்த தகவல் வெளியானது.

2022ஆம் ஆண்டு இனம் சார்ந்த வெறுப்புக் குற்றங்கள் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதில் கறுப்பினத்தவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமானதாகும்.

2022இல் பாலியல் நோக்குநிலையை இலக்காகக் கொண்ட வெறுப்புக் குற்றங்களின் எண்ணிக்கையும் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

பாலியல் நோக்குநிலையை இலக்காகக் கொண்ட வெறுப்புக் குற்றங்கள் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அதிகரித்துள்ளது.

இந்த அதிகரிப்புகளால் தாங்கள் ஆச்சரியப்படவில்லை என கறுப்பின,  LGBTQ2S+ சமூகங்களுக்கான வழக்கறிஞர்கள் கூறுகிறனர்.

இந்த தரவுகள் காவல்துறையில் புகாரளிக்கப்பட்ட குற்றங்களை மட்டுமே பிரதிபலிக்கும் நிலையில் 2022 இல் கனடாவில் நடந்த வெறுப்புக் குற்றங்கள் எண்ணிக்கையை இந்த அறிக்கை குறைத்து மதிப்பிடுவதாக புள்ளிவிவரத் திணைக்களம் குறிப்பிடுகிறது.

Related posts

சர்வதேச மாணவர்கள் வருகையை மேலும் குறைக்க முடிவு

Lankathas Pathmanathan

Ontarioவில் புதிய குறுஞ்செய்தி மோசடி குறித்து காவல்துறை எச்சரிக்கை

Lankathas Pathmanathan

அவசரகாலச் சட்ட விசாரணையில் சாட்சியமளிக்கும் பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment