Ontario மாகாண வரவு செலவுத் திட்டம் March மாதம் 26ஆம் திகதி சமர்ப்பிக்கப்படுகிறது.
Ontarioவின் நிதியமைச்சர், மாகாணத்தின் அடுத்த வரவு செலவுத் திட்டத்தை March 26ஆம் திகதி சமர்ப்பிப்பதாக கூறினார்.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் வரி அதிகரிப்பு எதுவும் இல்லை என நிதியமைச்சர் Peter Bethlenfalvy தெரிவித்தார்.
வரிகள், கட்டணங்களை அதிகரிக்காமல் அல்லது வணிகங்கள், நகர சபைகள் மீது அதிக சுமைகளை ஏற்படுத்தாமல் Ontario வின் பொருளாதாரத்தை அரசாங்கம் எவ்வாறு மீண்டும் கட்டியெழுப்புகிறது என்பதை இந்த நிதித் திட்டம் கோடிட்டுக் காட்டும் என அவர் கூறினார்.
ஆனாலும் வரவு செலவுத் திட்டம் குறித்து மேலதிக விபரங்களை வெளியிட அவர் மறுத்துள்ளார்.
Ontario மாகாணம் இந்த ஆண்டை $4.5 பில்லியன் பற்றாக்குறையுடன் முடிக்கும் என அவர் முன்னர் கணித்திருந்தார்.
கடந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தின் போது அவர் கண்காணித்த 2023-24 ஆம் ஆண்டிற்கான 1.3 பில்லியன் டொலர் பற்றாக்குறையை விட இது கணிசமான அதிகரிப்பாகும்.