Quebec மாகாணத்தின் Trois-Rivieres நகரில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடத்தில் நிகழ்ந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.
Trois-Rivières இல் முதியோர் இல்ல கட்டுமானத்தின் போது புதன்கிழமை காலை இந்த விபத்து நிகழ்ந்தது.
காவல்துறையினரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு சென்றபோது, கட்டிடத்தின் ஒரு பகுதி கீழே விழுந்து, தொழிலாளர்கள் சிக்கியிருப்பதை கண்டனர்.
காயமடைந்தவர்கள் அவசர உதவி மூலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்த விபரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.