நாடளாவிய ரீதியில் அனைத்து மாகாணங்களுக்கும் இரண்டு பிரதேசங்களுக்கும் சுற்றுச்சூழல் கனடா புதன்கிழமை (28) வானிலை எச்சரிக்கைகளை வெளியிட்டது.
Ontario, Quebec மாகாணங்களில் குளிர்கால புயல் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இந்த மாகாணங்களின் சில பகுதிகளில் 20 CM க்கும் அதிகமான பனி பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.
கடுமையான குளிர் எச்சரிக்கைகள் Alberta, Saskatchewan, Manitoba, வடக்கு Ontarioவின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் புதன்கிழமை காலை முதல் காற்றின் குளிர்நிலை -45 வரை எட்டக்கூடும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது.
புதன்கிழமை, Atlantic கனடாவின் பெரும்பகுதியை மழை, காற்று எச்சரிக்கைகள் உள்ளடக்கியுள்ளது.
New Brunswick மாகாணத்தின் சில பகுதிகளில் புதன்கிழமை முதல் வியாழக்கிழமை (29) காலை வரை 100 MM மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கு மணிக்கு 70 முதல் 80 KM அல்லது அதற்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது.
Nova Scotiaவில் பலத்த காற்றுடன் சிறிய அளவிலான மழையும் எதிர்பார்க்கப்படுகிறது.
Prince Edward தீவில் மணிக்கு 90 KM வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு Newfoundland மாகாணத்தில் மணிக்கு 120 KM வேகத்தில் காற்று எதிர்பார்க்கப்படுகிறது.
British Colombia மாகாணத்தின் சில பகுதிகளில் பனிப்பொழிவு எச்சரிக்கைகள் நடைமுறையில் உள்ளன
புதன்கிழமை பிற்பகல் வரை 20 CM அல்லது அதற்கும் அதிகமான பனி பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு Vancouver தீவில் மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை (27) இரவு முதல் புதன்கிழமை பிற்பகல் வரை 50 MM மழை எதிர்பார்க்கப்படுகிறது.
Nunavut, Northwest பிரதேசங்களின் சில பகுதிகள் கடுமையான குளிர் எச்சரிக்கையின் கீழ் உள்ளன.
அங்கு புதன்கிழமை காலை காற்றின் குளிர் நிலை -55 வரை இருக்கும் என எதிர்வு கூறப்படுகிறது
புதன்கிழமை வானிலை எச்சரிக்கையின் கீழ் இல்லாத ஒரே பிரதேசமாக Yukon உள்ளது.