December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனடிய அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு

“Freedom Convoy” பேரணியின் பிரதான ஒருங்கமைப்பாளர் கனடிய அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது வங்கிக் கணக்குகளை முடக்க அவசரச் சட்டத்தை பயன்படுத்தியதற்காக Chris Barber இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

COVID கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தனது  உரிமைகளை மீறும் நடவடிக்கை இதுவென அவர் வாதிடுகின்றார்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தச் சட்டம் மத்திய அரசின் ஒரு அதிகார துஷ்பிரயோகம் என அவர் குறிப்பிடுகின்றார்.

அவர் Saskatoonனில் உள்ள நீதிமன்றத்தில் கடந்த வாரம் ஒரு கோரிக்கை அறிக்கையை தாக்கல் செய்திருந்தார்

Chris Barber, தென்மேற்கு Saskatchewanனில் உள்ள ஒரு  trucking நிறுவனத்தின் உரிமையாளராவார்.

Related posts

குறைந்த ஊதியம் பெறும் உறுப்பினர்களுக்கு குறிப்பிடத்தக்க ஊதிய உயர்வை வழங்கும் ஒப்பந்தம்!

Lankathas Pathmanathan

Quebecல் அலை அடித்துச் சென்றதில் ஐவர் மரணம்

Lankathas Pathmanathan

300 சதவீதம் அதிகரித்த ஆசிய விரோத வெறுப்பு குற்றங்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment