தேசியம்
செய்திகள்

Edmonton நகரசபை மண்டபத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்த விபரம்

Edmonton நகரசபை மண்டபத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் ஒரு பாதுகாவலர் என தெரியவருகிறது.

செவ்வாய்க்கிழமை (23) காலை Edmonton நகரசபை மண்டபத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

நகரசபையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் குழு கூட்டத்தில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடத்தப்பட்டது.

இந்த சம்பவத்துடன் பாதுகாவலராக பணிபுரிந்த ஒருவர் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.

28 வயதான Bezhani Sarvar என்பவருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Canadian Corps of Commissionaires என்ற இலாப நோக்கற்ற பாதுகாப்பு நிறுவனத்தில் இவர் கடமையாற்றியதாக தெரியவருகிறது.

குறிப்பிட்ட சந்தேக நபர் தமது நிறுவனத்தின் ஒரு ஊழியர் என்பதை உறுதிப்படுத்திய Canadian Corps of Commissionaires, அவர் நகரசபை மண்டபத்தில் வேலை செய்ய நியமிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடுகிறது.

இந்த சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை.

இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக Edmonton காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

மாகாணம் தழுவிய எதிர்ப்பு நடவடிக்கைக்கு தயராகும் CUPE

Lankathas Pathmanathan

ஐந்து முதல் பதினொரு வயதுடைய குழந்தைகளுக்கு Health கனடா Pfizer booster தடுப்பூசியை அங்கீகரித்தது

Lankathas Pathmanathan

இஸ்ரேலுக்கான விமான சேவைகளை ஆரம்பித்த Air Canada

Lankathas Pathmanathan

Leave a Comment