தேசியம்
செய்திகள்

செய்தியாளர் சந்திப்பில் மயங்கி வீழ்ந்த Montreal நகர முதல்வர்

Montreal நகர முதல்வர் Valerie Plante செய்தியாளர் சந்திப்பின் போது மயங்கி வீழ்ந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

செவ்வாய்க்கிழமை (05) காலை நகரசபையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது முதல்வர் மயங்கி வீழ்ந்தார்.

ஆனாலும் அவரது உடல் நலத்திற்கு ஆபத்து எதுவும் இல்லை என கூறப்படுகிறது.

Montreal நகரின் வீடற்றவர்கள் குறித்த கேள்விக்கு முதல்வர் பதிலளித்துக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

சில நொடிகள் பேசுவதை நிறுத்திய முதல்வர் Valerie Plante, பின்னர் மயங்கி வீழ்ந்த சம்பவம் நிகழ்ந்தது.

கீழே வீழ்ந்த போது அவர் சுயநினைவுடன் இருந்ததாக கூறப்படுகிறது

மருத்துவ அவசர ஊர்தி (ambulance) நகரசபைக்கு அழைக்கப்பட்ட போதிலும், அவர்  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட வில்லை.

Montreal நகர முதல்வர் Valerie Plante மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டதாக முதல்வரின் செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

Related posts

Liberal கட்சியை விட முன்னிலையில் உள்ள Conservative கட்சி

Lankathas Pathmanathan

வாக்குச்சாவடிகளில் முகமூடி விதிகள் அமுல்படுத்தப்படும்: கனேடிய தேர்தல் திணைக்களம்!

Gaya Raja

Ontarioவில் அறிவிக்கப்பட்ட தடுப்பூசி கடவுச்சீட்டு திட்டம்!

Gaya Raja

Leave a Comment