December 12, 2024
தேசியம்
செய்திகள்

ஆறு மாதங்களில் பயணத்திற்காக $14.6 மில்லியன் செலவிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

2023ஆம் ஆண்டின் முதல் பாதியில் பயணத்திற்காக கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14.6 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளனர்.

இது முந்தைய ஆறு மாதங்களை விட ஏறத்தாழ 10 சதவீதம் அதிகரிப்பாகும்.

COVID தொற்றின் பின்னரான பயண செலவு அதிகரிப்பு இதற்கான காரணமாக சுட்டிக் காட்டப்படுகிறது.

அதேவேளை தமது சொந்த தொகுதிகளிலும், நாடாளுமன்றம் அமைந்துள்ள Ottawaவிலும் தமது நேரத்தை சமநிலைப்படுத்தி செலவு செய்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பும் நிலையில் இந்த செலவு அதிகரிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

பொதுவெளியில் கிடைக்கும் தரவுகளில் பிரதமர்  Justin Trudeau, அவரது அமைச்சரவை உறுப்பினர்களின் பயண செலவு விபரங்கள் வெளியாகவில்லை.

இந்த நிலையில் கனடாவின் இரண்டு முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் மிகப்பெரிய பயண செலவை
கொண்டுள்ளனர்.

Conservative தலைவர் Pierre Poilievre 247,819 டொலர்களையும், NDP தலைவர் Jagmeet Singh 177,500 டொலர்களையும் இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் பயணங்களில் செலவு செய்துள்ளனர்.

Related posts

நான்கு மாகாணங்களில் வெப்ப எச்சரிக்கை

Kitchener இல்ல வெடிப்பு சம்பவத்தில் நால்வர் காயம்

Lankathas Pathmanathan

13 முதற்குடியினர் மரணங்கள் குறித்து மீள் விசாரணை

Lankathas Pathmanathan

Leave a Comment