December 12, 2024
தேசியம்
செய்திகள்

மத்திய அரசுடன் B.C. மாகாணம் $1.2 பில்லியன் டொலர் சுகாதார ஒப்பந்தம்

மத்திய அரசாங்கத்துடன் 1.2 பில்லியன் டொலர் மதிப்புள்ள சுகாதார ஒப்பந்தத்தில் British Colombia மாகாணம் கையெழுத்திட்டுள்ளது.

இதன் மூலம் மத்திய அரசாங்கத்துடன் வடிவமைக்கப்பட்ட நிதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் மாகாணமாக British Colombia அமைகிறது.

மத்திய சுகாதார அமைச்சர் Mark Holland இந்த ஒப்பந்தத்தை செவ்வாய்க்கிழமை (10) அறிவித்தார்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பிரதமர் Justin Trudeau அறிவித்த 196 பில்லியன் டொலர் சுகாதார உடன்படிக்கையின் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் அமைகிறது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் மத்திய அரசு 1.2 பில்லியன் டொலர்களை British Colombia மாகாணத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு வழங்குகிறது.

Related posts

4.5 சதவீதமாக அதிகரிக்கும் வட்டி விகிதம்?

Lankathas Pathmanathan

Ontario வீட்டுத் திட்ட அமைச்சரின் தலைமைப் பணியாளர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

நாடளாவிய ரீதியில் 1,725 தொற்றுக்கள்!

Gaya Raja

Leave a Comment