தேசியம்
செய்திகள்

இந்தியாவில் சிக்கியுள்ள கனடிய பிரதமர்!

பிரதமர் Justin Trudeauவின் விமானம் தொழில்நுட்ப சிக்கலை எதிர்கொள்ளும் நிலையில் அவர் இந்தியாவில் தங்க வேண்டிய கட்டாயம் தோன்றியுள்ளது.

G20 மாநாட்டில் கலந்து கொள்ளும் வகையில் பிரதமர் Justin Trudeau தலைமையிலான கனேடிய தூதுக்குழு இந்தியா பயணித்திருந்தது.

பிரதமர் Justin Trudeau, அவரது தூதுக்குழு, பிரதமருடன் பயணிக்கும் ஊடகங்கள் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (10) இரவு இந்தியாவில் இருந்து புறப்பட்ட ஏற்பாடாகியிருந்தது.

இந்த தொழில்நுட்ப சிக்கலை ஒரே இரவில் சரி செய்ய முடியாத நிலையில் கனேடிய தூதுக்குழு இந்தியாவில் தங்க வேண்டிய கட்டாயம் தோன்றியுள்ளது.

மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை பிரதமர் Justin Trudeau தலைமையிலான கனேடிய தூதுக்குழு இந்தியாவில் தங்கியிருக்கும் என பிரதமர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

G20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் Justin Trudeau வெள்ளிக்கிழமை (08) இந்தியா சென்றடைந்தார்.

பிரதமர் உட்பட தூதுக்குழு எவ்வாறு அல்லது எப்போது நாடு திரும்புவார்கள் என்ற விபரம் வெளியாகவில்லை.

Related posts

திங்கட்கிழமை Ontarioவில் நகரசபை தேர்தல்

Lankathas Pathmanathan

குழந்தைகள் மீதான COVID தாக்கத்தை ஆராயும் திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் நிதியுதவி

Lankathas Pathmanathan

Don Valley North தொகுதியின் மாகாணசபை உறுப்பினர் கட்சியில் இருந்து விலகல்

Lankathas Pathmanathan

Leave a Comment