தேசியம்
செய்திகள்

Greenbelt திட்டம் குறித்த RCMP விசாரணை ஆரம்பம்!

Ontario மாகாண அரசாங்கம் Greenbelt திட்டத்தை கையாண்ட விதம் குறித்து RCMP விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது.

Ontario மாகாண காவல்துறையால் (OPP) இந்த விடயம் RCMPயின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில் தமது விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக RCMP புதன்கிழமை (23) காலை உறுதிப்படுத்தியது.

Greenbelt திட்டத்தில் உள்ள முறைகேடுகள் குறித்து தமது அதிகாரிகள் விசாரணையை முன்னெடுப்பார்கள் என RCMP புதன்கிழமை காலை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் “பெறப்பட்ட தகவல்களை மதிப்பாய்வு செய்து, தேவையானதாக கருதப்படும் விடயங்களில் தகுந்த நடவடிக்கை எடுப்போம்” என அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.

ஆரம்ப நிலையில் உள்ள இந்த விசாரணை தொடரும் நிலையில் இதில் மேலதிக கருத்துகளை தெரிவிக்க RCMP மறுத்துள்ளது.

Ontario அரசாங்கத்தின் Greenbelt மேம்பாட்டுத் திட்டங்கள் சார்புடையவை என தனது புதிய அறிக்கையில் அண்மையில் கணக்காய்வாளர் நாயகம் Bonnie Lysyk பரிந்துரைத்திருந்தார்.

ஆனாலும கணக்காய்வாளர் நாயகத்தின் இந்த குற்றச்சாட்டை Ontario முதல்வர் Doug Ford மறுத்திருந்தார்.

இந்த நிலையில் Ontario வீட்டுத் திட்ட அமைச்சரின் தலைமைப் பணியாளர் Ryan Amato தனது பதவி விலகல் கடிதத்தை முதல்வர் அலுவலகக்திற்கு செவ்வாய்க்கிழமை (22) அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Torontoவில் அமைந்துள்ள ஜேர்மன் துணைத் தூதரகத்தின் முன்பாக கனேடிய தமிழர்களின் ஆர்ப்பாட்டம்

Gaya Raja

D-Day நிகழ்வில் பங்கேற்ற France பயணமாகும் பிரதமர்

Lankathas Pathmanathan

Torontoவில் கனடாவின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம்

Lankathas Pathmanathan

Leave a Comment