கனடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது.
Scarborough Rouge Park தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரிக்கு இலங்கை செல்ல அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது.
இந்த தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி உறுதிப்படுத்தினார்.
இந்தியாவில் நடைபெறும் G 20 நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ள ஹரி ஆனந்தசங்கரி அங்கிருந்து இலங்கை செல்ல திட்டமிட்டிருந்தார்.
இந்த பயணத்திற்காக கோரிய பயண விசாவை இலங்கை மறுத்துள்ளதாக ஹரி ஆனந்தசங்கரி கூறினார்
இலங்கையில் மனித உரிமைகள் குறித்த தனது நிலைப்பாட்டின் காரணமாக இந்த அனுமதி மறுப்பு நிகழ்ந்ததாக ஹரி ஆனந்தசங்கரி கூறியுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்னர் வவுனியாவில் பெரும்பான்மையின போராட்டக்காரர்கள் கனடிய பிரதமர் Justin Trudeau, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி ஆகியோருக்கு எதிராக போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இந்த போராட்டத்தின் முடிவில் Justin Trudeau, ஹரி ஆனந்தசங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன.
தமிழர் உரிமைகளுக்கான கனடிய அரசாங்கத்தின் ஆதரவிற்கு எதிர் நடவடிக்கையாக இது நோக்கப்படுகிறது.