தேசியம்
செய்திகள்

Kashechewan முதற்குடி பகுதியில் நீரில் மூழ்கியதாக தேடப்பட்ட தமிழரின் உடல் மீட்பு

Ontarioவில் Kashechewan முதற்குடி பகுதியில் நீரில் மூழ்கியதாக தேடப்பட்டு வந்த தமிழரின் உடல் மீட்கப்பட்டது.

நீரில் மூழ்கிய தமிழரான அவசர மருத்துவ உதவியாளரை தேடும் பணி இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இவரது சடலம் புதன்கிழமை (05) மாலை மீட்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

பலியானவர் 23 வயதான அர்ச்சனன் சிவசத்தியராஜ் என குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டார்.

இவரது குடும்பத்தினர் இலங்கையில் மல்லாகத்தை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.

Kashechewan முதற்குடி சமூகத்தில் இருந்து 20 படகுகளும் 50 தனி நபர்களும் இவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Ontario மாகாண காவல்துறையும் இவரை தேடும் முயற்சிக்கு உதவியது

திங்கட்கிழமை (03) முதல் காணாமல் போனதாக தேடப்பட்ட இவர், நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என ஆரம்பம் முதல் அஞ்சப்பட்டது.

இந்த பகுதியில் புதியதாக கடமையில் இணைந்த அர்ஜனன் சிவசத்தியராஜ், மற்றொரு துணை அவசர மருத்துவ உதவியாளர், ஒரு செவிலியர் ஆகியோருடன் உதவி பொருட்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

100 மில்லியன் தடுப்பூசிகளை கனடா வளரும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும்

Gaya Raja

பொது உட்புற இடங்களுக்கான முகமூடி கட்டுப்பாடுகளை நீக்கும் B.C.

Lankathas Pathmanathan

சில நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு கூடுதல் COVID தடுப்பூசி தேவைப்படலாம்!

Gaya Raja

Leave a Comment