December 12, 2024
தேசியம்
செய்திகள்

Ontarioவில் இரண்டு தொகுதிகளில் இடைத் தேர்தல்

Toronto, Ottawa தொகுதிகளில் மாகாண இடைத் தேர்தல் எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெற உள்ளது.

Scarborough-Guildwood, Kanata-Carleton தொகுதிகளில் இந்த இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

முதல்வர் Doug Fordன் அலுவலக இந்த இடைத்தேர்தலுக்கான அறிவித்தலை வெளியிட்டது.

Kanata-Carleton தொகுதி கடந்த March மாதம் முதல் வெற்றிடமாக உள்ளது.

அந்த தொகுதியில் மாகாணசபை உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்த Merrilee Fullerton திடீரென தனது பதவியில் இருந்து விலகியிருந்தார்

Toronto நகர முதல்வர் இடை தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது Scarborough-Guildwood தொகுதி மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து Mitzie Hunter கடந்த மாதம் விலகியிருந்தார்.

இந்த நிலையில் இந்த இரண்டு தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில் Scarborough – Guildwood தொகுதியில் நடைபெற உள்ள Ontario மாகாண சபை உறுப்பினர் தெரிவுக்கான இடைத் தேர்தலில் NDP வேட்பாளராக தட்ஷா நவநீதன் போட்டியிடுகின்றார்.

Scarborough – Guildwood தொகுதி இடைத்தேர்தலில் தமிழ் பெண் வேட்பாளர்

அதேவேளை Ontarioவில் விரைவில் மற்றொரு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

Kitchener மத்திய தொகுதியில் NDP மாகாணசபை உறுப்பினர் அடுத்த மாதம் தனது பதவியில் இருந்து விலகவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது

Lankathas Pathmanathan

மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமை ஆணையர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

இரண்டு இடைத் தேர்தலில் வெற்றிபெற்றது Liberal கட்சி

Lankathas Pathmanathan

Leave a Comment