December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனடா தின வானவேடிக்கை இரத்து!

Montreal நகரில் சனிக்கிழமை (01) இரவு திட்டமிடப்பட்ட கனடா தின வானவேடிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் காட்டுத்தீ காரணமாக காற்றின் தரம் குறித்த எச்சரிக்கைகள் தொடரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் தொடரும் காட்டுத்தீ காரணமாக கனடா தினத்திற்கு திட்டமிடப்பட்ட வானவேடிக்கைகள் பல இரத்து செய்யப்படும் நிலை தோன்றியுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

கனடா முழுவதும் காட்டுத் தீயின் எண்ணிக்கை கடந்த வாரத்தில் அதிகரித்துள்ளது.

இந்த காட்டுத்தீயின் எதிரொலியாக ஏற்படும் புகை மூட்டம் காரணமாக, சில நகரங்களில் கனடா தின வான வேடிக்கைகள் இரத்து செய்யப்படுகின்றன.

Related posts

கனடாவில் மீண்டும் 3,000க்கும் அதிகமான தொற்றுக்கள்!

Gaya Raja

விறுவிறுப்பாக தொடரும் தேர்தல் பிரச்சாரம்!

Gaya Raja

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட கனேடியர்களுக்கு முடிவுக்கு வரும் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள்

Gaya Raja

Leave a Comment