தேசியம்
செய்திகள்

Torontoவின் புதிய நகர முதல்வர் Olivia Chow

Torontoவின் புதிய நகர முதல்வராக Olivia Chow தெரிவாகியுள்ளார்.

இதன் மூலம் Toronto நகரின் 66ஆவது நகர முதல்வராக Olivia Chow தெரிவாகியுள்ளார்.

ஒன்றிணைந்த Toronto நகரத்தை வழிநடத்தும் முதல் பெண்மணியாக Olivia Chow தெரிவானார்,

அதேவேளை ஒன்றிணைந்த Toronto நகரத்தை முதல் சிறுபான்மை இனத்தவரும் இவராவார்.

இதன் மூலம் Toronto நகரசபையில் 13 ஆண்டுகால வலதுசாரி ஆட்சி முடிவுக்கு வருகிறது.

Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தல் வாக்களிப்பு திங்கட்கிழமை (26) நடைபெற்றது.

John Tory வகித்து வந்த நகர முதல்வர் பதவியில் இருந்து திடீரென விலகிய நிலையில் இந்த இடைத் தேர்தல் நடைபெற்றது .

இந்த தேர்தலில் 2 தமிழர்கள் உட்பட மொத்தம் 102 பேர் போட்டியிட்டனர்.

வாக்காளர்கள் ஆயிரத்துக்கும் அதிகமான வாக்களிப்பு நிலையங்களில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குகளை பதிவு செய்தனர்.

கனடிய வரலாற்றில் மிகப் பெரிய இடைத்தேர்தலாக இது வர்ணிக்கப்படுகிறது.

Related posts

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 19ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

கனடா மீது சீனா குற்றச்சாட்டு!

Gaya Raja

வார இறுதியில் முன்கூட்டிய வாக்குப்பதிவு!

Gaya Raja

Leave a Comment