தேசியம்
செய்திகள்

இரண்டு தொகுதிகளில் Liberal, இரண்டு தொகுதிகளில் Conservative வெற்றி!

நான்கு மத்திய தொகுதிகளில் திங்கட்கிழமை நடைபெற்ற இடைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் Liberal கட்சியும், இரண்டு தொகுதிகளில் Conservative கட்சியும் வெற்றிபெற்றன .

Manitoba மாகாணத்தில் இரண்டு, Ontario, Quebec மாகாணங்களில் தலா ஒன்று என மொத்தம் நான்கு தொகுதிகளில் திங்களன்று இடைத் தேர்தல் வாக்களிப்பு நடைபெற்றது.

இதில் Québec மாகாணத்தின் Notre-Dame-de-Grâce–Westmount தொகுதியில் Liberal கட்சியின் வேட்பாளர் Anna Gainey வெற்றிபெற்றார்.

அவர் 50 சதவீத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றார்.

Ontario மாகாணத்தின் Oxford தொகுதியில் Conservative கட்சியின் வேட்பாளர் Arpan Khanna வெற்றிபெற்றார்.

அவர் 40 சதவீத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றார்.

Manitoba மாகாணத்தின் Portage–Lisgar தொகுதியில் Conservative கட்சியின் வேட்பாளர் Branden Leslie வெற்றிபெற்றார்.

அவர் 65 சதவீதம் வரையிலான வாக்குகளை பெற்றார்.

Manitoba மாகாணத்தின் Winnipeg South Centre தொகுதியில் Liberal கட்சியின் வேட்பாளர் Ben Carr வெற்றி பெற்றார்.

அவர் 55 சதவீத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றார்.

அரசியலில் இருந்து விலகிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களில் பதவிக்கு பதிலாகவும், முன்னாள் Liberal அமைச்சரின் மரணத்தால் வெற்றிடமான ஒரு ஆசனத்திற்காகவும் இந்த இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதில் Manitobaவில் ஒரு தொகுதியில் கனடா மக்கள் கட்சியின் தலைவர் Maxime Bernier, Quebecகில் நடைபெறும் இடைத் தேர்தலில் பசுமைக் கட்சியின் துணைத் தலைவர் Jonathan Pedneault ஆகியோர் போட்டியிட்டனர்.

இவர்கள் இருவரும் இந்த தேர்தலில் வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

Related posts

அத்தியாவசிய மருந்துகளின் பெருமளவிலான ஏற்றுமதியை தடுக்க நடவடிக்கை

Quebec கடற்கரையில் மீன்பிடிக்கச் சென்ற நால்வர் கடலில் மூழ்கியதில் மரணம்

Lankathas Pathmanathan

அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் LGBTQ2S+ சமூகத்திற்கு கனடா பயண எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment