தேசியம்
செய்திகள்

மாணவர்களை நாடு கடத்தும் திட்டம் நிறுத்தம்!

மோசடி திட்டத்தில் சிக்கிய சர்வதேச மாணவர்களை நாடு கடத்தும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மாணவர்களை கனடாவிற்கு அழைத்து வருவதற்கு குடிவரவு முகவர்கள் போலி கடிதங்களை வழங்கியது அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டது.

இதனால் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட மாணவர்களை நாடு கடத்துவதற்கான உத்தரவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு அமைச்சர் Sean Fraser புதன்கிழமை (14) அறிவித்தார்.

நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் வரை, சில மாணவர்கள் தங்கள் ஆவணங்கள் போலியானவை என்பது தெரியாது இருந்துள்ளனர் என கூறப்படுகிறது.

இந்த விடயத்தில் ஒவ்வொரு சம்பவத்தையும் ஒரு பணிக்குழு விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இதில் நாட்டை விட்டு வெளியேற சிலருக்கு மாத்திரம் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், அந்த செயல்முறை இடைநிறுத்தப்படும் என உறுதியளித்தார்.

மூத்த குடிவரவு, எல்லைக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் பணிக்குழு இதில் ஒவ்வொரு வழக்கையும் ஆய்வு செய்து, அந்த மாணவர் மோசடி குறித்து அறிந்திருந்தார்களா என்பதைத் தீர்மானிக்கவுள்ளனர் .

Related posts

கனடாவில் Delta மாறுபாட்டின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

Gaya Raja

800 காட்டுத்தீ தொடர்ந்து கட்டுக்குள் இல்லாத நிலை தொடர்கிறது!

Lankathas Pathmanathan

Ontarioவில் விரிவாக்கப்படும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் – அவசர கால நிலை நீட்டிக்கப்படுகிறது!

Gaya Raja

Leave a Comment