Nova Scotiaவில் முன்னெப்போதும் இல்லாத காட்டுத்தீ தொடர்ந்து புதன்கிழமை (31) நான்காவது நாளாக கட்டுப்பாட்டை இழந்து எரிந்து வருகிறது.
இந்த தீயின் அளவு 837 hectares அளவில் அதிகரித்துள்ளது
இந்த தீயினால் உயிரிழப்போ காயமோ எவருக்கும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் Halifaxசில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்ட 16 ஆயிரம் பேரில் சிலரை மீண்டும் வீடு திரும்ப மாகாண அதிகாரிகள் விரைவில் அனுமதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.