வெளிநாட்டு குறுக்கீடு சிறப்பு அறிக்கையாளராக David Johnstonனின் பணியில் தொடர்ந்து நம்பிக்கை கொண்டுள்ளதாக Liberal கட்சி தெரிவித்தது.
பொது விசாரணைக்கு எதிராக பரிந்துரைத்ததை அடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் அழைப்பு விடுத்து வருகின்றன.
ஆனாலும் David Johnston பல ஆண்டுகளாக கனடியர்களுக்கு சேவையாற்றியவர் என பிரதமர் Justin Trudeau கூறினார்.
பிரதமரின் இந்தக் கருத்தை பல Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்தனர்.
David Johnston பதவி விலக வேண்டும் என கோரும் ஒரு பிரேரணை நாடாளுமன்றத்தில் NDPயினால் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.