தேசியம்
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 7ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

வீடுகளில் இருக்குமாறு பெருமளவு கனேடியர்கள் கோரப்படும் அதே வேளை, ஒவ்வொரு நாளும் வேலைக்குச் சமூகமளிக்குமாறு பல மில்லியன் கனேடியர்கள் கோரப்படுகிறார்கள். இவர்கள் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதன் மூலம் எமது குடும்பங்கள் தொடர்ந்து பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதி செய்கிறார்கள். கனேடியர்கள், முன்னரைவிடவும் இவர்களில் அதிகம் தங்கியிருப்பதால், அவர்களுக்கு அவசியமாகத் தேவைப்படும் சம்பள அதிகரிப்பை வழங்குவதற்குக் கனேடிய அரசு மாகாணங்களுடனும், பிராந்தியங்களுடனும் சேர்ந்து செயற்படுகிறது.

தமது அத்தியாவசிய பணியாளர்களின் சம்பளங்களை அதிகரிப்பதற்கான செலவைப் பகிர்ந்து கொள்வதற்கான திட்டங்களை அனைத்து மாகாணங்களும், பிராந்தியங்களும் உறுதி செய்து விட்டன, அல்லது அதை உறுதி செய்யும் நடைமுறை மேற்கொள்கின்றனவெனப் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ இன்று அறிவித்தார்.

குறைந்த வருமானம் பெறும் அத்தியாவசிய பணியாளர்களின் சம்பளங்களை அதிகரிப்பதற்கு உதவியாகக் கனேடிய அரசு 3 பில்லியன் டொலர் வரையான பணத்தை வழங்கும். எந்தப் பணியாளர்கள் உதவிக்குத் தகுதி பெறுவார்களெனவும், அவர்களுக்கு எவ்வளவு உதவி வழங்கப்படுமெனவும் மாகாணங்களும், பிராந்தியங்களும் முடிவு செய்யவுள்ளன. நிச்சயமற்ற தற்போதைய கால கட்டத்தில், கனேடியர்களுக்கும், கனேடிய வணிக நிறுவனங்களுக்கும் உதவியளிக்கும் விரிவான பொருளாதாரத் திட்டத்தின் அங்கமாக இந்த நடவடிக்கைகள் அமைகின்றன. மாறி வரும் நிலைமையைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து, உடல் நலம், பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்கும், பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கும் தேவையான அனைத்து மேலதிக நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும்.

Updated Emergency Measures by the Canadian Federal Government on May 7th 

While many Canadians are being asked to stay home, millions of Canadians are being called on to go to work every day. These individuals are providing essential services, so we can continue to keep our families safe and healthy. Canadians are relying on them now more than ever, and that is why the Government of Canada is working with provinces and territories to provide them with a much-needed wage boost.

The Prime Minister, Justin Trudeau, today announced that all provinces and territories have confirmed, or are in the process of confirming plans to cost share wage top-ups for their essential workers.

The Government of Canada will provide up to $3 billion in support to increase the wages of low- income essential workers. Each province or territory will determine which workers would be eligible for support, and how much support they will receive. These measures are part of the Government of Canada’s comprehensive economic plan to help Canadians and businesses through this period of uncertainty. The government will continue to monitor this evolving situation closely, and take additional actions as needed to protect health and safety, and stabilize the economy.

Related posts

இலங்கை: சீரழிந்து வரும் பொருளாதாரம் – உள்நாட்டு அமைதியின்மை குறித்து கனடா கவலை

Torontoவில் கோடை கால அனைத்து நிகழ்வுகளும் இரத்து!

Gaya Raja

கனடாவில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு நாளாந்தம் தடுப்பூசி வழங்கல்!

Gaya Raja

Leave a Comment