Toronto Maple Leafs பொது மேலாளர் பதவியில் இருந்து Kyle Dubas வெளியேற்றப்பட்டார்.
வெள்ளிக்கிழமை Maple Leafs அணி இந்த அறிவிப்பை வெளியிட்டது.
June 30 ஆம் திகதியுடன் Maple Leafs அணியுடன் அவருக்கான ஒப்பந்தம் முடிவடையுள்ளது.
37 வயதான Kyle Dubas கடந்த ஒன்பது ஆண்டுகளாக Maple Leafs அணியுடன் பணியாற்றியுள்ளார்.
அவற்றில் ஐந்து ஆண்டுகள் Maple Leafs அணியின் பொது மேலாளராக அவர் பணியாற்றினார்.
Stanley Cup Playoffs தொடரில் இரண்டாவது சுற்றில் Florida Panthers அணியிடம் தோல்வியடைந்த நிலையில்
இந்த தொடரில் இருந்து Toronto Maple Leafs அணி வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.