தேசியம்
செய்திகள்

Toronto நகர முதல்வர் தேர்தலில் 102 வேட்பாளர்கள்!

Toronto நகர முதல்வர் தேர்தலில் போட்டியிட நூறுக்கும் அதிகமானவர்கள் பதிவாகியுள்ளனர்.

June மாதம் நடைபெறும் இடைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் வெள்ளிக்கிழமை (12) மாலை 2 மணி வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இந்த இடைத் தேர்தலில் போட்டியிட மொத்தம் 102 பேர் வேட்பாளர்களாக பதிவாகியுள்ளனர்.

இவர்களில் தற்போதைய நகர சபை உறுப்பினர்கள், முன்னாள் நகர சபை உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள், கல்விச் சபை உறுப்பினர்கள் ஆகியோர் அடங்குகின்றனர்.

இந்த தேர்தலில் ஒரு பெண் உட்பட இரண்டு தமிழ் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

தேர்தலில் போட்டியிடும் பெரும்பாலான முன்னணி வேட்பாளர்கள் பங்கேற்கும் விவாதம் எதிர்வரும் திங்கட்கிழமை (15) இரவு நடைபெறவுள்ளது.

வாக்களிப்புக்கு ஆறு வாரங்கள் உள்ள நிலையில், மக்கள் கருத்து கணிப்பில் தொடர்ந்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் Olivia Chow முன்னிலையில் உள்ளார்.

இந்த இடைத் தேர்தல் வாக்களிப்பு June மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.

முன் கூட்டிய வாக்களிப்பு June 8 ஆம் திகதி முதல் June 13 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

Related posts

ஆரம்பமானது புதிய நாடாளுமன்ற அமர்வு – புதிய சபாநாயகர் தேர்வு

Lankathas Pathmanathan

தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட புதிய ஜனநாயக கட்சி!

Gaya Raja

முதலாவது ஈழ தமிழர் கனடாவில் அமைச்சராக பதவியேற்றார்

Lankathas Pathmanathan

Leave a Comment