தேசியம்
செய்திகள்

Toronto நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடும் 18 வயது இளைஞர்

Toronto நகர முதல்வர் பதவிக்கு 18 வயது இளைஞர் ஒருவர் போட்டியிடுகின்றார்.

18 வயதான Meir Straus என்ற 12ஆம் ஆண்டு மாணவர் இந்த இடைத் தேர்தலில் போட்டியிட பதிவாகியுள்ளார்.

இந்த தேர்தலில் கவனம் பெறாத சில முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க முடிவு செய்துள்ளதாக Meir Straus கூறினார்

தன்னுடைய வயதுடையவர்கள் தேர்தல் அரசியலில் உரிமையற்றவர்களாக உணர்கின்றனர் என அவர் தெரிவித்தார்

நகர முதல்வருக்கான இடைத் தேர்தலில் போட்டியிட இதுவரை ஐம்பது பேர் பதிவாகியுள்ளனர்

இடைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் May 12 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தல் வாக்களிப்பு June மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.

முன் கூட்டிய வாக்களிப்பு June 8 ஆம் திகதி முதல் June 13 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

Related posts

கனடா தினத்தை கொண்டாட வேண்டாம் என தேர்வு செய்பவர்களை மதிக்க வேண்டும்: பிரதமர்

Gaya Raja

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

COVID -19 பரவலின் எதிரொலியாக கனடாவின் முக்கிய செய்திகளை தொகுத்து தருகின்றோம்.

thesiyam

Leave a Comment