தேசியம்
செய்திகள்

கனடிய அரசுக்கும் – பொதுச் சேவை சங்கத்துக்கும் இடையில் தொடரும் பேச்சுவார்த்தை

கனடிய அரசுக்கும் நாட்டின் மிகப் பெரிய பொதுச் சேவை சங்கத்துக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் இந்த வார இறுதியில் நடைபெற்றன.

கருவூல வாரியத் தலைவர் Mona Fortier இந்த தகவலை வெளியிட்டார்.

நாடளாவிய ரீதியில் 155,000க்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் புதன்கிழமை (19) முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்

இந்த விடையத்தில் பிரதமர் Justin Trudeau தலையிட வேண்டும் என பொதுச் சேவைக் கூட்டணியின் தலைவர் Chris Aylward சனிக்கிழமை (22) அழைப்பு விடுத்தார்.

கனடாவின் பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் வேலை நிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை (23) ஐந்தாவது நாளாக தொடர்கிறது.

Related posts

மதச்சார்பின்மை சட்டம் அரசியலமைப்புக்கு உட்பட்டது!

Lankathas Pathmanathan

கனேடிய செய்திகளை அதன் தளங்களில் இருந்து நீக்க Google முடிவு

Lankathas Pathmanathan

North York கத்திக் குத்துச் சம்பவத்தில் தமிழர் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment