தேசியம்
செய்திகள்

விமர்சனத்திற்கு உள்ளாகும் நெறிமுறைகள் ஆணையரின் நியமனம்

இடைக்கால நெறிமுறைகள் ஆணையராக அமைச்சரின் மைத்துனி நியமிக்கப்பட்டதை பிரதமர் நியாயப்படுத்தினார்.

கனடாவின் இடைக்கால நெறிமுறைகள் ஆணையராக அரசுகளுக்கிடையேயான விவகார அமைச்சர் Dominic LeBlancகின் மைத்துனி Martine Richard நியமிக்கப்பட்டார்.

Martine Richard இடைக்கால நெறிமுறை ஆணையராகப் பொறுப்பேற்பார் என கடந்த செவ்வாய்கிழமை (28) அறிவிக்கப்பட்டது.

முன்னாள் நெறிமுறைகள் ஆணையர் Mario Dion கடந்த மாதம் ஓய்வு பெற்ற பின்னர், ஆறு மாத காலத்திற்கு Martine Richard அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

இந்த நியமனம் குறித்து Conservative கட்சியினர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர்.

NDP நாடாளுமன்ற குழு தலைவர் Peter Julian இந்த நியமனத்தை விமர்சித்துள்ளார்.

இந்த நியமனம் குறித்து கேள்வி எழுப்பும் அறிக்கையை Bloc Québécois கட்சியும் வெளியிட்டது.

ஆனாலும் இந்த நியமனத்தில் தான் பங்கேற்கவில்லை என அமைச்சர் Dominic LeBlanc வெள்ளிக்கிழமை (31) செய்தியாளர்களிடம் கூறினார்.

Related posts

தாயகத்தில் உள்ள தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்துவோம்: கரி ஆனந்தசங்கரி

Lankathas Pathmanathan

கனடாவில் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிகரிக்கும் COVID தொற்று !

Gaya Raja

Montreal Olympic மைதானத்தில் காயமடைந்த தொழிலாளி

Lankathas Pathmanathan

Leave a Comment